கோவை கார் வெடிப்பு வழக்கு - 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை!

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான கைதானவர்களில் 4 பேரிடம் தேசிய புனலாய்வு முகமை அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை நடத்தினர்.



கோவை: கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தீவிரவாத நோக்குடன் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதல் என கருதப்படும் இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கைதானவர்களில் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்திருந்திருந்தனர்.

இந்நிலையில், முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தௌபிக், சனாபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை காவலில் எடுத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களை சென்னையில் வைத்து விசாரித்த பின்பு நேற்று காலை கோவைக்கு அழைத்து வந்து காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தினர்.



இதனைத் தொடர்ந்து, கோவை அழைத்துவரப்பட்ட 6 பேரில், சனாபர் அலி, முகமது ரியாஸ்,நவாஸ், தௌபிக் ஆகிய 4 பேர் மட்டும் நள்ளிரவு 11.30மணி அளவில் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபின் இல்லத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பின் எஸ்.பியான ஸ்ரீஜித் தலைமையில் அழைத்துவரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், ஜமீஷா முபீனின் வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்தும் 4 பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்போது விசாரணை மேற்கொண்டனர்.



பின்னர், 4 பேரையும், உக்கடம் பகுதியில் உள்ள சனாபர் அலியின் வீடு மற்றும் ஜி. எம். பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதோடு, அனைத்து விசாரணையையும் வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 4 பேரை, நள்ளிரவில் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...