கோவையில் பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு கோவையிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

இதற்கென அரசு சார்பில் கடந்த பல ஆண்டுகளாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு கோவையிலிருந்து, மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12 ஆம் தேதிமுதல் 14 ஆம் தேதி வரை மதுரை, திருச்சி, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்திற்கு100 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகளும், திருச்சி மற்றும் சேலத்திற்கு தலா 50 பேருந்துகளும் என மொத்தம் 240 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...