கடும் குளிரில் உறைந்த கோவை - மக்கள் அவதி!

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த புத்தாண்டு முதல் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நள்ளிரவு தொடங்கி காலை வரை அதிகப்படியாக குளிர் நிலவி வருகிறது.



அந்த வகையில், இன்றும் கோவை மாநகர் மற்றும் சுற்றுப் பகுதிகள் உட்பட மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான குளிர் நிலவியது.

மழைபோல் கொட்டிய பனியால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல இடங்களிலும் குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது.



அதன்படி, ஆனைமலையில் 14.9 டிகிரி செல்சியசும், அன்னூரில் 14.4 டிகிரி செல்சியசும், காரமடையில் 13.6 டிகிரி செல்சியசும், மதுக்கரையில் 19.6 டிகிரி செல்சியசும், சுல்தான்பேட்டையில் 16.6 டிகிரி செல்சியசும், சூலூரில் 14.5 டிகிரி செல்சியசும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பகுதியில் 16.6 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.

தைப்பொங்கல் வரை இந்த பனிப்பொழிவு நிலவும் எனவும், கோவையில் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...