'நொய்யல் ஆற்றை மீட்டெடுப்பது அவசியம்..!' - கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர் வேறுவிதமான அரசியலில் அவர் ஈடுபடக்ககூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் பசுமை தாயகம் சார்பில் "நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக கோவை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்களின் முக்கிய நோக்கமே நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும் என்பதுதான். நொய்யலைக் காப்பற்ற வேண்டும் என்ற நிலைபோய், தற்போது மீட்க வேண்டும் என்ற நிலையில் நாம் உள்ளோம். முதல் கட்டமான முயற்சி.

மன்னராட்சிக் காலத்தில், சேர, சோழ, பாண்டிய மண்னர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நொய்யலை பாதுகாத்தனர். 32 அணை, குளம் மற்றும் ஏரிகளை உருவாக்கி இந்த பகுதியில் வளர்ச்சிக்கான திட்டத்தை வகுத்ததனர்.

நொய்யலாற்றின் மூலம் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றுவந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகாலமாக திடக்கழிவு, ரசாயன கழிவு, சாயக்கழிவுகள், சாக்கடை கழிவு, மணல் கொள்ளை, செங்கல் சூளை மணல் கொள்ளை, போன்றவற்றாலும், ஆக்கிரமிப்புகளாலும் ஆறு கடுமையாக பாதிக்கபட்டுள்ளது

கண்டிப்பாக இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும். பாமக மற்றும் பசுமை தாயகமும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மக்களை ஒன்றினைத்து நொய்யலை மீட்டு எடுப்பேன்" என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறேன்.

நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர், சுத்திகரிப்பு என்பதே இல்லாமல் திருப்பூரில்தான் அதிகளவில் மாசடைகிறது. அரசியல் நோக்கம் பாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நொய்யலுக்கு என்று 2500 ஆண்டுகாலம் கடந்த வரலாறு உள்ளது. நொய்யலுக்கும் சோழர்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. கடந்த 5, 10 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பது உண்மைதான்.

ஆளுநரும் ஆளும் கட்சியும் இணைந்து தமிழக முன்னேற்றத்திற்கு செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது, தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர் வேறுவிதமான அரசியலில் அவர் ஈடுபடக்ககூடாது

மாநிலத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தமிழ்நாடா? தமிழகமா? திராவிடமா? திராவிட நாடா? மத்திய அரசா? ஒன்றிய அரசா? போன்ற விவாதங்களில் ஆளுநர் ஈடுபடக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டத்தால், வாரம் ஒரு தற்கொலை நடக்கிறது. அவர்களின் குடும்பம் நிற்கதியில் நிற்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆளுநர் கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்து வருவது ஏன்.

ரேஷன் கடை பொங்கல் பரிசு என்பது எப்போதுமே வரும் பிரச்சனைதான். பொங்கல் பரிசு தொகை ரூ.1000 -ஐ ஏன் பயனாளர்கள் வங்கி கணக்கில் செலுத்த கூடாது? இந்த டிஜிட்டல் உலகில் இது சாத்தியம் தானே? அரசால் ஏன் அதனை செய்ய இயலவில்லை?

2026ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. கேரளா அரசு டிஜிட்டல் சர்வே தொடர்பாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வரும், தமிழக அரசு ஒரு அமைச்சாரவை குழுவை அமைத்து கேரள முதல்வரிடம் பேசி இரு மாநிலமும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...