கோவையில் கார் பார்க்கிங் திட்டம் - மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!

கோவையில் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக வல்லுநர் குழுவுடன் மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் ஆலோசனை நடத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சியில் கார் பார்க்கிங் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றுவது தொடர்பாக காவல்துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடான ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆர்.எஸ்.புரம் மற்றும் பந்தைய சாலை உள்ளிட்ட இரண்டு இடங்களிலும் மற்றும் அதன் அருகில் உள்ள சாலைகளிலும் வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக வல்லுநர் குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.புரம், பந்தைய சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது, அதற்கான கட்டணம் நிர்ணயம் செய்வது, வாகனங்களை எவ்வாறு எந்தெந்த இடங்களில் நிறுத்துவது, அதற்கான இடங்களை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சோதனை ஓட்ட முறையில் வாகன நிறுத்துமிடம் எந்தெந்த பகுதிகளில் அமைப்பது என்பது குறித்து மாநகர காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர்களுடன் களஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

அதேபோல, கோவை மாநகராட்சியில் தேங்கும் கட்டடக்கழிவுகளை அகற்றுதல், கட்டடக்கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான கட்டணத்தை நிர்ணயம் செய்தல், நாள்தோறும் 100 டன் அளவிற்கு கட்டடக்கழிவுகளை அகற்றுதல், அதனை மறுசுழற்சி முறையில் சிமெண்ட், செங்கல், எம்சேன்ட், டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களை தயாரித்தல், இதற்கான ஒப்பந்தம் வருகின்ற ஜனவரி 24ம் தேதி நடைபெறவுள்ளது.

ஒப்பந்தம் தொடர்பான கருத்துக்கேட்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனான ஆலோசனையும் இந்தக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 24ம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்ட பின்னர், பணியை எவ்வாறு செய்வது என்பது குறித்து விரிவாக தகவல்கள் தெரிவிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.



இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, காவல்துறை துணை ஆணையர் போக்குவரத்து மதிவாணன், மாநகரப்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கர், ஹேமலதா, மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...