முதலமைச்சர் கோப்பை போட்டி - ஆன்லைனில் பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு!

கோவையில் நடைபெறும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 17ம் தேதி வரை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பங்கேற்கும் வகையில் 42 வகையான மாவட்ட அளவிலான போட்டிகளும், 8 வகையான மண்டல அளவிலான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் கோவையில் நடத்தப்பட உள்ளது.

இதில், மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும், மாநில அளவிலான போட்டிகள் மே மாதமும் நடைபெற உள்ளது.

மாவட்ட அளவில், முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டிகளில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து, மேசைபந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

பொதுப்பிரிவைச் சேர்ந்தவர் 15வயது முதல் 35 வயது வரையிலும், பள்ளி மாணவ மாணவியர்கள் 12 முதல் 19 வயது வரையிலும், அனைத்து கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் 17 முதல் 25 வயது வரையிலும் உள்ளவர்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் போட்டியாளர்களாகக் கலந்துகொள்ளலாம்.

இது தொடர்பாகப் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் இதற்கான பதிவுகளை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 17ம் தேதி வரை தங்களது பெயர்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...