பொங்கல்: கோவை - திண்டுக்கல் சிறப்பு இரயில் இயக்கம் - தென்மாவட்டங்களுக்கு கூடுதல் சேவை துவங்க வலுக்கும் கோரிக்கை

கோவையிலிருந்து பழனி வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டுவந்த 5 ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி18ம் தேதிவரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



அதேநேரத்தில், கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பழனி வழியாக இயக்கப்பட்டுவந்த 5 ரயில்களின் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி கோவையிலிருந்து தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டுவந்த ரயில்களின் சேவையை மீண்டும் தொடர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி,

1. கோவையிலிருந்து தென்காசி, திருநெல்வேலிக்கு வராந்திர ரயில்சேவை 2022ல் தொடங்கப்பட்டது. இந்த சேவை 95% பயணிகளுடன் மிகவும் பயனுள்ளதாகவும், நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த ரயிலை வாரத்திற்கு 3 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கோவையிலிருந்து மதுரைக்கு தினசரி ரயில் சேவை கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தச் சேவையை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் போல், முன்பதிவு மற்றும் ஏசி சேர்கார் வசதிகளுடன் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

3. கோவையிலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்பட்டுவந்த ரயிலானது, சென்னை வழியாக கோவை - திருவனந்தபுரம், மங்களூரு, சென்னை வழியாக மதுரை-கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர் என தென்னக ரயில்வேயின் இரண்டு முக்கிய வழித்தடங்களை இணைத்தது. இந்த ரயில் சேவையை பயணிகள் நலன்கருதி தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும், இரவு நேரங்களில் கோவையிலிருந்து பழனி வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்களை இந்தாண்டு முதல் மீண்டும் இயக்க வேண்டும் எனவும் ரயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...