'மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' - கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள 52வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல 52 - வது, வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது, கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடிக்க வேண்டும் என ஆணையர் பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கிழக்கு மண்டலம் உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், வார்டு உறுப்பினர் அம்சவேணி, உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், சுகாதார அலுவலர் பரமசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இதனை பொதுமக்களிடமும் வலியுறுத்த வேண்டுமென தூய்மை பணியாளர்களிடம் ஆணையர் பிரதாப் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...