கோவையில் பன்றி, பறவைக் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

கோவையில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம், நாகம்மா நாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.



கோவை: மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பாதுகாப்பு சிறப்பு முகாம், கோவை மாவட்டம், பட்டினம் ஊராட்சி நாகம்மா நாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இதில்,கோவை மண்டல கால்நடை துறை இணை இயக்குநர் டாக்டர் பெருமாள் சாமி, துணை இயக்குனர் டாக்டர் இளங்கோ, பட்டணம் ஊராட்சிமன்ற தலைவர் கோமதி செல்வகுமார் ஆகியோர் தலைமை வைத்தனர்.



இந்த முகாமில், மருத்துவர்கள் இருகூர் செல்வராணி, மங்கையர்கரசி, மாலதி தேவி, ராமநாதபுரம் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.



இந்த முகாமில் பட்டணம் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராம மக்களும் தங்களது ஆடு, மாடு கோழி மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு முகாமில் சிகிச்சை பெற்றனர்.

இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதம் அன்னூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் விநாயகம்பாளையம் காரமடை உள்பட கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...