திருப்பூர் குமரன் 91வது நினைவுநாள் - உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 91வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மலர் மரியாதை செய்தனர்.



கோவை: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று இன்னுயிர் ஈந்த தலைவர்களில் ஒருவரான திருப்பூர் குமரனின் 91வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.



இதையொட்டி, திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தியாகி குமரனின் திருவுருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், காங்கிரஸ் கமிட்டியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனைத் தொடர்ந்து குமரன் சாலையில் உள்ள தியாகி குமரன் உயிர் நீத்த இடத்திலும் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பள்ளிக் குழந்தைகளும் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...