கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கேரள லாட்டரி விற்பனை - 2 பேர் கைது

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் பூச்சியூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தங்கமணி மற்றும் தன்ராஜ் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் இருவரும் கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து கேரள லாட்டரி சீட்டுகள், 160 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...