'நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை' - எஸ்.பி எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக கி.பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலக அரங்கில் இன்று அவர் ஆலோசனை மேற்கொண்டார்.



இதில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட 6 தாலுகாக்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், "நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் (குட்கா, பான்பராக் மற்றும் புகையிலை) போன்ற பொருட்களை வியாபாரிகள் விற்க வேண்டாம்" என்று அறிவுறுத்தினார்.



முன்னதாக வியாபாரிகள் மற்றும் வணிகர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...