சிஎஸ்ஐ திருமண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு - கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500பேர் கைது!

சிஎஸ்ஐ திருமண்டலத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: சிஎஸ்ஐ கோவை திருமண்டலத்தில் நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளிடக்கி சிஎஸ்ஐ ஆலயங்கள், சிஎஸ்ஐ பள்ளிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இதில் 5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள கோவை மண்டலத்தை இரண்டாகப் பிரித்து சேலம் திருமண்டலம் என்ற பெயரிடப் போவதாகவும், ஈரோடு, திருப்பூர் வட்டத்தில் உள்ள சுமார் 50 போதக சேகரங்களைக் கொண்ட திருச்சபைக்கு, மக்கள் கருத்துக்களைக் கேட்காமலே பேராயர் மண்டலத்தைப் பிரிக்கப் போவதாகத் தெரியவந்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஈரோட்டைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...