கோவை கவுண்டம்பாளையம் அருகே கத்தியை காட்டி வழிப்பறி - இளைஞர் கைது!

கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரை மறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற கோவில்பட்டியை சேர்ந்த செண்பகராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது நண்பரை சந்திப்பதற்காக நேற்று முன் தினம் கவுண்டம்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், ராஜாவை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், அவரது கழுத்தில் கத்தியை வைத்து, “என் மேல நிறைய கேஸ் இருக்கு, நீ சத்தம் போடாம உன்கிட்ட இருக்க பணத்தை எடு” என்று கூறி மிரட்டியுள்ளார்.

அப்போது, அவ்வழியாக ஒருவர் வருவதை கண்ட மர்ம நபர், சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்றும், யாரிடமாவது இதை சொன்னால் தேடி வந்து கொன்றுவிடுவேன் என ராஜாவை மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், ராஜா இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்றைய தினம் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அந்த நபர், கோவில்பட்டியை சேர்ந்த செண்பகராஜ் என்பது தெரியவந்தது.

மேலும் ராஜாவை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட செண்பகராஜ் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...