காங்கேயம் அருகே கோவில் உண்டியல், நகைகளை திருடிவிட்டு பொருட்களுக்கு தீவைப்பு

காங்கேயம் அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் உண்டியல் மற்றும் அம்மன் சிலையில் இருந்த 2 சவரன் நகையை திருடிவிட்டு, கோவிலில் இருந்த பொருட்களுக்கு தீவைத்த மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில், பிரசித்தி பெற்ற புத்துக்கண் ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், அந்த கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் நாகராஜன், கோவிலை இன்று காலை திறந்து பார்த்தபோது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மற்றும் சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தாலிச் செயினும் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வேண்டிய பக்தர்கள் இருமுடி கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் நாகாத்தம்மன் கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்டு கோவில் பொருட்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...