கோவை மதுக்கரை அருகே கிணற்றில் இருந்து விவசாயி சடலமாக மீட்பு - குடும்பத்தினர் சோகம்..!

மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (68) என்ற விவசாயி, அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் அருகேயுள்ள செட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (68).

விவசாயியான இவர், கடந்த 6 மாதமாக மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், வெளியில் சென்றுவிட்டு, 2 அல்லது 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவார் எனவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த ரங்கசாமி திடீரென மாயமானதாக தெரிகிறது. இரவு நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மகன் வினோத் குமார் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்துள்ளார்.

ஆனால் எங்கும் கிடைக்காததால், மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார் என எண்ணி வினோத் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல வினோத்குமார் கிணற்றில் மோட்டார் போட சென்றுள்ளார்.

அப்போது ரங்கசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமார் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.



இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...