விவேகானந்தர் பிறந்த நாள்: உதகையில் எழுத்தாளர் ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை!

சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் விழாவையொட்டி உதகையில் உள்ள விவேகானந்தரின் சுருக்க எழுத்தாளர் ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில், ராமகிருஷ்ண மடம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.



நீலகிரி: சுவாமி விவேகானந்தரின் 160-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் சுவாமி விவேகானந்தரின் சுருக்க எழுத்தாளர் ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் மலர் தூவி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

உதகை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி பரகீர்த்தமானந்தா மகராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில், சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் உலகிற்கு கிடைப்பதற்கு சுருக்க எழுத்தாளர் J J குட்வின் பணி மிகவும் முக்கியமானது என்றும், இளைய சமூகம் ஒழுக்கமான வாழ்க்கைக்கும் மன வலிமை மிக்க தெளிவான சிந்தனைக்கு விவேகானந்தரின் வார்த்தைகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.



தாமஸ் தேவாலய அருட்தந்தை இம்மானுவேல் வேல்வேந்தர் பிரார்த்தனை செய்து பேசுகையில், அனைத்து சமூக மக்களும் அன்போடும் அமைதியோடும் வாழ்வதற்கு இது போன்ற குருமார்களின் கருத்துக்கள் நமக்கு வழிகாட்டுதலாக உள்ளது, என்றார்.

இதனை தொடர்ந்து அருட்தந்தை கிரிஸ்டோபர் பேசுகையில், "மனித வாழ்க்கை மகத்துவமானது. சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் வாழ்வில் கடைபிடித்து வாழ்வதே சிறப்பு" என்றார்.



இந்நிகழ்விற்கு பிரிக்ஸ் நினைவு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உதகையில் உள்ள மானஸ் அமைப்பு மற்றும் ராமகிருஷ்ணா மடம் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில், மானஸ் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...