உலகில் சரியான நேரத்திற்கு விமானத்தை இயக்கும் டாப் 20 விமான நிலையங்கள் - கோவைக்கு 13வது இடம்!

உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கும் விமான நிலையங்களின் பட்டியலில் கோயம்புத்தூர் விமான நிலையம் 13வது இடத்தைப் பிடித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளது.



கோவை: உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கும் 20 விமான நிலையங்களின் பட்டியல் விமான நிலையங்களுக்கான அதிகாரப்பூர்வ கையேட்டில் (Official Airline Guide )வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ஆகியவை சரியான நேரத்திற்கு இயக்கப் படுகிறதா என்பதை மதிப்பீடு செய்து, On Time Performence (OTP) அடிப்படையில் ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 20 விமான நிலையங்களின் பட்டியலில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 10 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.. அதுமட்டுமின்றி, 91.45%,91.44%,91.34%,90.78% சதவீத ஓடிபி-உடன் இந்தப் பட்டியலில் முதல் 4 இடங்களையும் ஜப்பானே பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் டர்பன் கிங் சாஹா விமான நிலையம் 89.73% ஓடிபி-உடன் 5வது இடத்தில் உள்ளது. 6, 7,10,11,12வது இடங்களில் ஜப்பான் நாட்டு விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பிரேசில், பனாமா, பெரு, ஈக்வேடார் நாடுகளைச் சேர்ந்த விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்த சர்வதேச தரப்பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் விமான நிலையம் 88.01% ஓடிபியுடன் 13வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவிலேயே கோயம்புத்தூர் விமான நிலையம் மட்டுமே, சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கும் உலகின் 20 விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...