திருப்பூர் ஓடை புறம்போக்கில் சடலத்தைப் புதைக்க முயற்சி? - அதிகாரிகள் விசாரணை

பல்லடம் அருகே ஓடை புறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அலுவலகம் எதிரே ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த நிலம் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஓடை புறம்போக்கு நிலத்தில் சிலர் குழி தோண்டி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப்பார்த்த அப்பகுதிவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், எதற்காக குழி தோண்டுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, அதற்கு அந்த நபர்கள், சடலத்தை அடக்கம் செய்வதற்கு குழிதோண்டச் சொன்னதாகவும், அதற்காகத் தோண்டுவதாகவும் தெரிவித்தனர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள், இந்த விவகாரம் தொடர்பாக, பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், குழி தோண்டியவர்களிடம் விசாரணை நடத்தினர்.



அப்போது, சடலம் புதைப்பதற்காகத்தான் அந்தக் குழி தோண்டப்பட்டது என்பதும், கூலிக்காக இந்தச் செயலை அவர்கள் செய்திருப்பதும் தெரியவந்தது. குழி தோண்டக் கூறிய நபர்கள் யார் என்பது குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஓடைபுறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...