'அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை தேவை..!' - கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு!

கோவையில் தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.



கோவை: கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.



சங்கத்தின் செயலாளர் அன்னம் திருநாவுக்கரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில், சுரேஷ் என்பவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து, தங்கள் சங்கம் பற்றியும் சங்க நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பதிவுகளை பதிவிட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.



இதுகுறித்து பலமுறை நேரிலும் காவல்நிலையம் வாயிலாகவும் அறிவுரை வழங்கியும் அவர் கேட்க மறுப்பதாகவும், எனவே, அவதூறு பரப்பும் நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, தங்களது பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அந்த மனுவில் மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட மருந்து வணிகளர் சங்க பொருளாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:



தங்களது சங்கத்தில் கடந்து ஒரு வருடத்திற்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. அதில் தங்கள் அணி வெற்றி பெற்றது. தனக்கு எதிராக பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தினால் சங்கத்தின் மீதும், சங்க நிர்வாகிகள் குறித்தும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.

இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். கோவை மருந்து வணிகர் சங்கம் தற்போது சுகாதாரத்துறை ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அவற்றை தடுக்கின்ற விதமாகவும் சுரேஷ் செயல்பட்டு வருகிறார். அவர்மீது காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...