பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா - நீதிபதிகள் பங்கேற்பு

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் அடுப்பு பற்ற வைத்துப் பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலையிட்டு பொங்கல் விழாவை வழக்கறிஞர்கள் கொண்டாடினர்.



இதைத்தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது.



இவ்விழாவில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல், மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...