திருப்பூரில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்.



திருப்பூர்: தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்டோரின் பெயரைக் கூற மறுத்து உரை வாசித்த ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்.



ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னத்தை தவிர்த்ததை கண்டித்தும், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...