செட்டிபாளையம் அருகே அழுகிய நிலையில் தொழிலாளி சடலமாக மீட்பு

கோவை செட்டிபாளையம் அருகே கை கால்கள் கட்டப்பட்டு, அழுகிய நிலையில் வட மாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை செட்டிபாளையம் பெரியகுயிழி இடும்பன் கோவில் அருகேயுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்தில் கை,கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதையடுத்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லாலம் கேவத் (37) என்பதும், அவர் சூலூர் தென்னம்பாளையம் விசாகா நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, மோல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.



இந்நிலையில் லாலம் கேவத் கடந்த 8ஆம் தேதி பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் செட்டிபாளையம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...