இன்னும் பத்து நாட்களில் 'தளபதி 67' அப்டேட் - கோவையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகவல்

சந்தோஷமாகச் சென்று படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். உயிரைக் கொடுக்கும் அளவிற்கு ஏதும் இல்லை. உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை என்று கோவையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி.


கோவை: கோவையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது.

வாரிசு திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காகத் தான் காத்திருந்தோம்.



இன்னும் 10 நாட்களில் தளபதி 67 அப்டேட் அடுத்தத்தடுத்து வெளிவரும்.

வருமானவரித்துறைக்குச் செலுத்தும் பணம் எங்கே செல்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினால், சுமையாக இல்லாமல் மகிழ்ச்சியாக வரி செலுத்தலாம். தமிழகத்தை “தமிழ்நாடு” என்று அழைப்பதையே விரும்புகிறேன்.

சினிமாவை பொறுத்தவரை அனைத்து படங்களும் ஓட வேண்டும். எல்லா ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். படம் வெளியாகும் போது கொண்டாட்டங்களில் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

ரசிகர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். உயிரை விடும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பொழுதுபோக்கு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சந்தோஷமாகச் சென்று படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். உயிரைக் கொடுக்கும் அளவிற்கு ஏதும் இல்லை. உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை என்பது எனது கருத்து எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...