கோவை ஹார்டுவேர் கடையில் பயங்கர தீவிபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை சிங்காநல்லூர் அருகே எலக்டாரிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.


கோவை: கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் ஆர்.ஜே. எலக்ட்ரிக்கல்ஸ் அன் ஹார்டுவேர் என்ற கடை செயல்பட்டுவருகிறது.



இந்தக் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கரும்புகையுடன் மளமளவென கடை முழுவதும் பரவிய தீயில், அங்கிருந்த பெயிண்ட்டுகள், பிளாஸ்டிக், மற்றும் ஒயர்கள் பற்றியெறிந்தன.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கணபதி தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தால் அப்பகுதியில் வெகுநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...