கோவையில் விவசாய நிலங்களில் தொடரும் காட்டுயானைகள் அட்டூழியம் - சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை பாப்பநாய்க்கன்பாளையத்தில் விவசாயத் தோட்டத்தில் நேற்றிரவு 2 காட்டுயானைகள் புகுந்து பாப்பாளி மரங்களை சேதப்படுத்திச் சென்றன. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருந்து வருகின்றன. அவ்வப்போது, இந்த யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் உணவு தேடி மலை அடிவார பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்துவருவது வாடிக்கையாக இருந்துவருகிறது.

அப்படி நுழையும் காட்டுயானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தடாகம் சுற்றுப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை மற்றும் கூட்டமாக வரும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும், குடியிருப்புப் பகுதியிகளில் உணவு தேடியும் சுற்றித் திரிவதுமாக இருக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில், பன்னிமடையை அடுத்துள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் நரசிம்ம ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.



இந்தத் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த 2 காட்டு யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.



காட்டுயானைகளின் செயல்கள் அங்கு பொருந்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் காட்டுயானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை மற்றும் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும், காட்டுயானைகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...