கோவையில் பழமையான மரங்களை வெட்டிய நபர்கள் - நடவடிக்கைகோரி நூதன வழிபாடு!

கோவையில் பழமை வாய்ந்த மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான மிகவும் பழமையான எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் பின்புறம் 50 ஆண்டுகளுக்கு மேலான புளியமரம் ஒன்று உள்ளது. புளியமரத்துடன் இணைந்து ஆலமரமும் வளர்ந்துள்ளது. புளியமரம் பட்டுப்போன காலத்தில் ஆலமரம் அதனை முழுவதுமாக காய்ந்துபோகாமல் பாதுகாத்து மீண்டும் வளர செய்தது.



இந்த நிலையில், அருகிலுள்ள தனியார்களுக்கு சொந்தமான கடைகளின் விளம்பர பலகைகள் வைப்பதற்காக இந்த மரத்தின் பெரிய கிளைகளை சிலர் வெட்டியுள்ளனர்.



இதனை அறிந்த கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, மரத்தின் கிளைகளை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடக்கு கோட்டாட்சியர், வட்டாட்சியர், தேசிய நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தபால் மூலம் பொதுமக்களும், சாலைகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளும் புகார் மனுக்களை அனுப்பினர்.



முன்னதாக வெட்டப்பட்ட மரத்திற்கு சிகப்பு துணி கட்டி மஞ்சள், குங்குமம் பூசி வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை வைத்து கற்பூரம் காட்டி சிறப்பு பூஜைகள் செய்து அவர்கள் மரத்தை சுற்றி வந்தனர்.



புகார் மனுவை மரத்தின் அருகில் வைத்து மரம் வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழிபாடு செய்தனர்.



இந்த நூதன வழிபாட்டால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன், பொருளாளர் டி.ஆர்.ராஜேந்திரன், துணை செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாக்குழு உறுப்பினர் ஜீவா, முருகதாஸ், மோகன்ராஜ், முத்துகுமார், சதாசிவம், சிவசங்கர் உட்பட பலர் இதில் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...