'தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும்..!' - திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகம் போராட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநரை பதவி விலககோரி திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.


திருப்பூர்: சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென புறப்பட்டு சென்றது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு சின்னத்தை தவிர்த்ததை எதிர்த்து, அரசியல் கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், ஆளுநரை பதவி விலககோரி திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது அண்ணா, அம்பேத்கர், பெரியார், கருணாநிதி உள்ளிட்டோரின் பெயர்களை கூற மறுத்து உரை வாசித்த ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்.



ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் இடம்பெறாமல் இந்திய அரசின் சின்னம் மற்றும் இடம் பெறச் செய்த தமிழகம் என குறிப்பிட்ட ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...