கோவை பூச்சியூரில் கஞ்சாவைப் பதுக்கி விற்பனை - இளைஞர் கைது

கோவை பூச்சியூரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 550 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறூவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் பெயர் விக்ரம் என்பதும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும், தற்போது கோவை கவுண்டம்பாளையத்தில் தங்கியுள்ள அவர், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விக்ரமை கைது செய்த பெரியநாய்க்கன்பாளையம் போலீசார், அவரிடமிருந்து 550 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான விக்ரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...