திருப்பூரில் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு - சாலையில் தோன்றிய திடீர் அருவி..!

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் 4வது திட்ட குடிநீர் சோதனை ஓட்டத்தின்போது குழாயின் வால்வு உடைந்ததால், சாலையில் தண்ணீர் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நான்காவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கென, மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டுவரப்பட்டு திருப்பூர் முழுவதும் வினியோகம் செய்யப்படவுள்ளது.

தற்போது சோதனை முயற்சியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.



இந்த நிலையில், திருமுருகன்பூண்டி பகுதியில் குடிநீர் கொண்டுவரப்படும் பிரதான குழாயின் வால்வு பழுதடைந்ததால், சாலையில் அருவிபோல் குடிநீரான ஆர்ப்பரித்துக் கொட்டியது.



இதனால், அந்தச் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், குழாயை உடனடியாக சீர்செய்து, குடிநீர் வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...