நீலகிரியில் ரூ.40 லட்சம் மதிப்பு புகையிலைப்பொருட்கள் கடத்தல் - ஓட்டுநர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக லாரி மூலம் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை.


நீலகிரி: கர்நாடகா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கூடலூர் வழியாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு தமிழக பதிவு எண் கொண்ட லாரி ஒன்றில், பிஸ்கட்டுகளுடன் சேர்த்து தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களில் ஒன்றான ஹான்ஸ் கடத்தப்படுவதாக கூடலூர் காவல்துறையினரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தொரப்பள்ளி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக, லாரி மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.



மேலும், லாரியை ஓட்டிவந்த கேரளாவை சேர்ந்த சுதிர் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...