சர்வதேச யோகா போட்டி - சாதனை படைத்த திருப்பூர் குட்டீஸ்..!

புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த மாணவி சக்தி சஞ்சனா மற்றும் மாணவன் சீட்டீஸ் ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.



திருப்பூர்: புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில் புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் 28 வது சர்வதேச யோகா திருவிழா போட்டிகள் நடைபெற்றன. கடந்த 4ம் தேதி முதல் 7 ஆம் தேதிவரை நான்கு நாட்கள் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

சர்வதேச அளவிலான இந்த யோகா போட்டியில் ரஷ்யா மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இதில், ஒன்பது வயது முதல் மூத்த குடிமக்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.



இதில், 9 வயது முதல் 14 வயது வரையோருக்கான பிரிவில் திருப்பூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி சக்திசஞ்சனா (வயது12) கலந்து கொண்டு வீரபத்ராசனம் உட்பட 3 ஆசனங்கள் செய்து, இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.



இதேபோன்று, கணியூரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் சிட்டீஸ் (வயது10)-ம், யோகா போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, மாணவ-மாணவியருக்கு பதக்கமும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



சர்வதேச யோகாப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து சொந்த ஊர் திரும்பிய மாணவி சக்தி சஞ்சனா மற்றும் மாணவன் சீட்டீஸ்-க்கு யோகா பயிற்சியாளர்கள், உறவினர்கள், பள்ளி மாணவ-மாணவியர், தேசிய யோகா சாதனையாளர் யோகா வைஷ்ணவி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...