ஊட்டி அருகே முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா!

ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பங்கேற்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கலந்து கொண்டு அனைவருடன் இணைந்து பொங்கல் வைத்து, முதியோருக்கு பொங்கல் வழங்கி உற்சாகபடுத்தினார்.



குறிப்பாக அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ள அனைவரிடமும் நேரடியாக உரையாடி அவர்களிடம் நலம் விசாரித்து பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் தஸ்தகீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...