பல்லடம் பகுதியில் மினி ஜவுளி பூங்கா - உற்பத்தியாளர்கள் வரவேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டார பகுதியில் அமையவுள்ள மினி ஜவுளி பூங்கா திட்டத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வரவேற்பு.


திருப்பூர்: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளருடனான திட்ட விளக்கக் கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்திற்கு இந்திய ஜவுளி அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.



இதில், தமிழகம் முழுவதும் மினி ஜவுளி பூங்காக்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பின் தங்கிய கிராமங்களை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். பல்லடம், பொங்கலூர், குண்டடம், சுல்தான்பேட்டை, குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மினி ஜவுளி பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு அளிக்கும் மானியங்கள் மூலம் தொழிலை மேம்படுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐந்து கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள், 2.5 கோடி பங்களிப்பைச் செலுத்த வேண்டும். மூன்று தொழில் நிறுவனங்கள் இணைந்து, 2 ஏக்கர் நிலத்தில் மினி ஜவுளி பூங்கா அமைக்கலாம். கட்டட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், மானியத்துடன் இயந்திரங்களும், நிறுவுவதற்கான திட்டங்களும் உள்ளன.



இத்திட்டம் நிறைவேறினால், தரமான துணிகளைக் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கும் என இந்த திட்ட விளக்கக் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ராமலிங்கம், மண்டல துணை இயக்குநர் ராகவன் மற்றும் திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜவுளி அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல், ஜவுளி பூங்கா திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தொழில் வளர்ச்சி அடையும். அண்டை நாடுகளுடன் போட்டிப் போட்டு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகும்.

இத்திட்டத்தால், சிறு குறு தொழில் துறையினர் பயனடைவதுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், முதன்முதலாக பல்லடத்துக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...