கோவை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - இருவர் கைது

கோவை விமான நிலையத்தில் பேண்ட் பாக்கெட்டில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தவர்கள் கைது



கோவை: à®•ோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வந்த பயணிகள் இருவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டது சோதனையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3.54 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்திற்குப் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருவர் தாங்கள் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கடலூரைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சியைச் சேர்ந்த இப்ராகிம் என்பது தெரியவந்தது. இருவரிடமிருந்தும் ரூ.2.05 கோடி மதிப்பிலான3.54 கிலோ எடையுள்ள பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...