கோவையில் போதை பொருள் விற்பனை - 4 பேர் குண்டாசில் கைது

கோவையில் போதை பொருள் விற்பனை ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.



கோவை: கோவையில் போதை பொருள் விற்பனை ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் கே.ஜி சாவடி காவல் நிலைய பகுதியில் மெத்தாம்பேட்டமைன் என்னும் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்த பாலக்காட்டை சேர்ந்த முகமது ஜெசீர் (21), அப்துல் ராஷிக் (22) ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இதேபோல் கிணத்துக்கடவு பகுதியிலும் போதைப்பொருள் விற்பனை செய்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (32), கிஷோர் அகமது (32) ஆகிய இரண்டு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முகமது ஜெசீர், அப்துல் ராஷீக், ராம்குமார் மற்றும் கிஷோர் அகமது ஆகியோர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் உயர் ரக போதை மருந்து கடத்தல் குற்றவாளிகளான முகமது ஜெசீர், அப்துல் ராஷிக், ராம்குமார் மற்றும் கிஷோர் அகமது ஆகிய நான்கு நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் தங்களது பகுதியில் இது போன்ற குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...