கோவை கவுண்டம்பாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயம்

கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியில் தாய் - தந்தை வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த கந்தகோனார் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் சந்தியா (21) பள்ளிப்படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்றைய தினம் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டில் தனியாக இருந்த மகள் சந்தியாவை காணவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தியாவை அக்கம் பக்கத்தினர் வீடுகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் கல்யாணசுந்தரம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் சந்தியாவை தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...