கோவை ஆனைக்கட்டி அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை - விவசாயிகள் அச்சம்..!

ஆனைக்கட்டி அடுத்த கோபனாரி பகுதியில் வெங்கடேஷ் என்பவரது தோட்டத்தின் வேலிகளை உடைத்து உள்ளே நுழைந்த யானை, தோட்டத்தில் இருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.



கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இந்த காட்டு யானைகள், அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.



இந்த நிலையில் கோவை ஆனைகட்டி கோபனாரி பகுதியில் உள்ள வெங்கடேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கம்பி வேலிகளை காட்டு யானை ஒன்று உடைத்துள்ளது.



இதையடுத்து தோட்டத்திற்குள் புகுந்த அந்த ஒற்றை யானை அங்கிருந்த 8 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.



இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், யானைகள் தோட்டங்களுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...