கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் விழா - உறிடியத்து மகிழ்ந்த காவல் ஆணையர்..!

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உறியடித்தும் கயிறு இழுத்தும் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.



கோவை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தைத் திருநாள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், பத்து ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக காவலர் பொங்கல் விழா வெகு விமர்சியாக கொண்டாப்பட்டது.



அலுவலக வளாகத்தில், வண்ணக் கோலாமிட்டு, பொங்கல் பானையில் பொங்கல் வைத்த உயர் காவல் அதிகாரிகள், "பொங்கலோ பொங்கல்" என குலவையிட்டு அசத்தினர்.



விழாவின் நிறைவு நிகழ்வாக பாரம்பரிய விளையாட்டுகளான உறியடிக்கும் நிகழ்வு, கயிறு இழுக்கும் போட்டியை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்து, அவரும் உறிடியத்து மகிழ்ந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:



வெளி ஊர் செல்லும் பயணிகள் நெரிசலில் சிக்காமல் செல்ல மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 300 போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர முழுவதும் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் விதமாக ரோந்து பணி செல்ல காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகமாக வசூலித்தால்,அவர்கள் மீது புகார்கள் வரும் பட்சத்தில் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படுவதோடு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவலர் குடும்பங்கள் மிக மகிழ்வுடன் இந்த பொங்கலை கொண்டாடுவார்கள். சட்டம் ஒழுங்கை சரியாக இருக்க வைப்பதே பொங்கலை மகிழ்ச்சியாக்கும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...