கோவை கவுண்டம்பாளையம் அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கு - இருவர் கைது..!

கவுண்டம்பாளையம் அருகே நண்பரை சந்திக்க காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகிய இருவரை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன். கூலித் தொழிலாளியான இவர், தனது நண்பரை சந்திப்பதற்காக கவுண்டம்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் பெஸ்ட் ஆட்டோ எலக்ட்ரிகல்ஸ் கடை முன்பு காத்திருந்துள்ளார். அவர், செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.



இது தொடர்பாக நடேசன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...