கோவையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

கோவையில் பி.என்.புதூரில் இருந்து அரசு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: à®•ோவை பி.என் புதூர் கண்ணு வீதியில் வசித்து வருபவர் சித்ரா (வயது 55). இவர் நேற்று பி.என்.புதூர் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வருவதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார். 

அப்போது டி.எஸ்.பி பேருந்து நிறுத்தத்தில் சித்ரா இறங்கியபோது, தான் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அவர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பேருந்தில் பயணம் செய்வது போல் சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துச் சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பி.என்.புதூர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...