ஊட்டி அருகே சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் - ஆட்சியர் அம்ரித் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல்வர் கையொப்பமிட்ட வாழ்த்து மடலை வழங்கினார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட அணிக்கொரை கிராம சமுதாயக் கூடத்தில், சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அம்ரித், அணிக்கொரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், பழங்குடியினர் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.



மேலும், 5 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முதல்வர் கையொப்பமிட்ட வாழ்த்து மடல்களை வழங்கினார்.



இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ‘வாழ்க வளமுடன்' மகளிர் சுய உதவிக்குழுவிற்குத் தொழில் தொடங்குவதற்காக ரூ.15 லட்சத்திற்கான காசோலையினையும், சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்குப் புத்தாடைகளை வழங்கி, சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறப்பாகப் போடப்பட்டிருந்த ரங்கோலி கோலத்தினை பார்வையிட்டு சுய உதவிக்குழு உறுப்பினர்களைப் பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...