'10 கோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து..!' - கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும்,பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன், பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிப்பு.


தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும்,பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கும் வாழும் 10 கோடிக்கும் அதிகமான தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. எனவே, பா.ஜ.க., மகளிரணி தேசியத் தலைவர் என்ற முறையில் நாட்டு மக்கள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகை என்பது இந்த மண்ணின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பண்டிகை. மனிதன் தனது வாழ்வுக்கும் துணை செய்யும் இயற்கைக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாள். உலகம் 'மனிதநேயம்' பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் கலாசாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற 'உயிர்மைநேயத்தை' வலியுறுத்தி கொண்டே இருக்கிறது.

அதனை நமக்கு உணர்த்தும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை. பருவமழை மாற்றத்தால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து, உலகம் பேரபயாத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இயற்கையின் முக்கியத்துவத்தை நமக்கும் உணர்த்தும் பொங்கல் திருநாள் மிகமிக முக்கியமானதொரு பண்டிகையாகிறது.

தமிழர்களின் வாழ்வில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனியொரு இடம் உண்டு. தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த பொங்கல் நாளில் அனைவரும், அனைத்து துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நாட்டில் அமைதி, வளம், மகிழ்ச்சி செழிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...