கோவையில் 2024ல் 56-வது IWWA ஆண்டு மாநாடு

இந்திய வாட்டர் ஓர்க்ஸ் அசோசியேஷன் எனப்படும் IWWA அமைப்பானது, 56வது மாநாட்டை 2024ம் ஆண்டில் கோவையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கான முதல்‌ புல்லட்டினை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் வெளியிட்டார்.


கோவை: இந்திய வாட்டர் ஒர்க்ஸ் அசோசியேஷனாது (IWWA) நகராட்சி, தொழில்துறை, விவசாய பயன்பாடுகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வல்லுநர்களைக் கொண்ட தன்னார்வ அமைப்பாகும்.

இந்த அமைப்பின் நோக்கம் புதிய மற்றும்‌ கழிவு நீரை நீர்வகிப்பதில்‌ அறிவியல்‌, தொழில்நுட்பம்‌, பொருளாதாரம்‌, சுற்றுச்சூழல்‌, சூழலியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ ஆகியவற்றின்‌ வளாச்சியைத்‌ தூண்டி ஊக்குவிப்பதே ஆகும். இந்தத்‌ துறையில்‌ பணிபுரியும்‌ நபர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களுக்கு கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை வழங்குவதற்கான ஒரு பொதுவான தளத்தை இந்த அமைப்பு வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டு ஒவ்வொரு மாநிலத்தில் முக்கிய நகரத்தை தேர்வு செய்து இந்த அமைப் தமது மாநாட்டை நடத்திவருகிறது. அதன்படி, 55வது மாநாடு இந்த ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம்‌ பூனேவில்‌ நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு 56வது மாநாட்டினை கோவையில் நடத்த IWWA அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான தொடக்கமாக, புல்லட்டின் வெளியிடும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையா்‌ மு.பிரதாப் கலந்துகொண்டு மாநாட்டிற்கான முதல் புல்லட்டினை வெளியிட்டார்.



இந்நிகழ்ச்சியில், மாநகர காவல்‌ ஆணையாளர்‌ வே.பாலகிருஷ்ணன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய தலைமை பொறியாளர்‌ டி.சீனிவாசன்,‌ கண்காணிப்பு பொறியாளர்‌ எ.செந்தில்குமார்‌, செயற்பொறியாளர்‌ எம்‌.மதியழகன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...