கேரளாவில் ஒருவரை தாக்கி கொலை செய்த புலி - மயக்க ஊசி செலுத்தி பிடித்த வயநாடு வனத்துறை..!

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஒருவரை தாக்கி கொலை செய்துவிட்டு போக்கு காட்டி வந்த புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளார்.


கேரளா: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியில் நேற்று முன்தினம் புலி ஒன்று தாக்கி கொலை செய்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்தப் புலியை உடனடியாக பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் ஆட்கொல்லி புலியை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகளை அமைத்திருந்தனர். ஆனால் கூண்டில் புலி சிக்காத நிலையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வயநாடு வனத்துறையினர் புலியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குப்பாடிரா பகுதியில் பதுங்கி இருந்த புலிக்கு வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தினர்.



அதனையடுத்து அந்த புலி மயங்கிய நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் அங்கும் இங்குமாக சுற்றியது.



நீண்ட நேரத்திற்கு பின் மயங்கி கீழே படுத்ததை அடுத்து அந்த புலி பிடிக்கபட்டு வயநாட்டில் உள்ள வன விலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த பிடித்த நிலையில் மாணந்தவாடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...