கோவை சிங்காநல்லூரில் திமுக கலை இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

சிங்காநல்லூரில் திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், திமுக மகளிரணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி திமுக சார்பில் கலை இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில், திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள், 100க்கும் மேற்பட்ட மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.



ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு, தை முதல் நாளையும், பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டையும் வரவேற்றனர்.



இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...