கோவை ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கல் விழா சிறப்பு பூஜை - 4 டன் கரும்புகளால் கோவில் நடை அலங்காரம்

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கலையொட்டி கோவில் முகப்பில் 4 டன் கரும்புகளை கொண்டு செய்யப்பட்டுள்ள அலங்காரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


கோவை: உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை அனைத்து தமிழர்களால் மகிழ்ச்சியுடன் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் காலையில் சூரிய பொங்கல் வைத்து கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கல் தினத்தை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.



இதில், அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.



மேலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு கோவில் முகப்பு மற்றும் கோவில் நடை முழுவதும் சுமார் 4 டன் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களை வழங்கி வழிபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...