கோவையில் பைக் மீது கார் மோதல் - பெண் படுகாயம்

கோவை சங்கனூர் சாலை பிரிவு பகுதியில் பைக் மீது கார் மோதியதில் பெண் படுகாயம்.


கோவை: கோவை சங்கனூர் ரோடு பிரிவு பகுதியில் பள்ளியிலிருந்து குழந்தையைச் சென்ற பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் பெண் படுகாயமடைந்தார். விபத்து குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சத்யபிரியா. இவர் சங்கனூர் சாலை பிரிவு அருகே உள்ள பள்ளியிலிருந்து தனது குழந்தையை அழைத்துக் கொண்டு பைக்கில் வாகனத்தில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் சத்யபிரியா சென்ற பைக் மீது மோதியுள்ளது. இதில் சத்யபிரியா தூக்கிவீசப்பட்டுப் படுகாயமடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் சத்யபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...