கோவையில் மாட்டு பொங்கல் - மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து வழிபட்ட விவசாயிகள்!

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவை ராமநாதபுரம் அருகே விவசாயிகள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை அணிவித்து வழிபாடு செய்து கொண்டாடினர்.



கோவை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்களது மாடுகளை அலங்கரித்து வழிபட்டு மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த பாரதி நகர் பகுதியில், அதிகாலை முதலே மாட்டை குளிப்பாட்டிய விவசாயிகள், மாட்டின் மீது மஞ்சள் தெளித்தும், நெற்றியில் குங்குமம் வைத்தும் வழிபட்டனர்.



இதனை தொடர்ந்து மாட்டுக்கு மாலை அணிவித்த உரிமையாளர்கள், அதற்கு புதிய மூக்கணாங் கயிறையும் அணிவித்தனர்.

இதையடுத்து, மாட்டுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும், இன்று ஒரு நாள் மட்டும் மாட்டை கவனிக்காமல், எப்பொழுதும் மாட்டின் மீது கவனம் செலுத்தி அன்பாய் இருக்க வேண்டுமென மாடு வளர்க்கும் இளம் பெண்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...