ஊட்டி தாவரவியல் பூங்காவில் சமத்துவ பொங்கல் விழா - சுற்றுலா பயணிகள் உற்சாக கொண்டாட்டம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்தில் சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


நீலகிரி: தமிழர் திருநாளாம் தை திருநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்றும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள் இன்று சுற்றுலா தலங்களை காண நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.



இதன் காரணமாக உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

பூங்காவின் மைய பகுதியில் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கிய போது சுற்றி இருந்த அனைவரும் “பொங்கலோ பொங்கல்”என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டு உற்சாகமடைந்தனர்.



இதனையடுத்து பூங்காவில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் பரத நாட்டியம் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான தோடர் மற்றும் படுகர் இன பெண்கள் ஆடிய பாரம்பரிய நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



அதில் படுகர் இன மக்கள் நடனமாடும் பொழுது சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு அவர்களது பாரம்பரிய பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். இதில் உற்சாகமாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...